மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் பாடசாலை மத்தியஸ்த திட்டத்தின் கீழ் 2023 ஆண்டு நவம்பர் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கான பயிற்சி அமர்வுகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது! இரண்டாவது அமர்வு டிசம்பர் மாத தொடக்கத்தில் முடிவடைந்ததுடன், மூன்றாவது அமர்வு மாதத்தின் நடுப்பகுதியில் நிறைவுபெற்றது.
ஒரு வாரம் நீளமான ஒவ்வொரு அமர்வும், MAS துல்ஹிரியா பயிற்சி நிலைய வளாகத்தில், மத்தியஸ்த உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சுறுசுறுப்பான மற்றும் அர்ப்பணிப்புடனான பங்கேற்புடன் இடம்பெற்றது. SEDR திட்டத்தின் நிபுணத்துவ ஆலோசகர்களால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, பாடசாலைகளில் உள்ள பிணக்குகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை உருவாக்க, பங்குபெற்ற உத்தியோகத்தர்களுக்கு திறன்கள் வழங்கப்பட்டது.
SEDRஇன் இலக்கு மாகாணங்கள் (வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா) மற்றும் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில், இந்த அமர்வுகள் மூலம் பெற்ற திறன்கள் மற்றும் பாடங்களை உத்தியோக்கத்தார்கள் மேலும் பரப்புவார்கள்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது பயிற்சி அமர்வுகளின் சில பதிவுகளுக்கு கீழே உள்ள கேலரியைப் பார்வையிடவும்!
பாடசாலை மத்தியஸ்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கை, SEDR திட்டத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த ஆண்டில் மீண்டும் தொடங்கும். மேலும் புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள்!
Comentarios