top of page
Sri_Lanka_00020.jpg

எங்கள் பணிகள் பற்றி

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் தெரிவு செய்யப்பட்ட சில மாவட்டங்களில் மாற்று வழிமுறைகளில் பிணக்குத் தீர்த்தல் மற்றும் மத்தியஸ்த சேவைகளுக்கு உதவியும் ஊக்கமும் அளிப்பதற்காக SEDR ஆனது செயற்படுகின்றது. 

கருத்திட்ட பின்னணி

இலங்கையில் நான்கு ஆண்டு காலப்பகுதியில் (2020-2024) ஏஷியா பவுண்டேஷனுடன் கூட்டிணைந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியமானது பிரிட்டிஷ் கவுன்ஸிலை ஒப்பந்தம் செய்துள்ளது.

சமூக ஒத்திசைவு மற்றும் சமூக-அரச தொடர்புகளில் மக்களின் பங்கேற்பு அதிகரிக்கப்படுவதை முன்நிறுத்தி பிணக்குத் தீர்வுக்கான மாற்று வழிமுறைகள் இலங்கையில் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் மற்றும் அவற்றின் பயன்மிக்கதன்மையை மேம்படுத்துவதற்காகவும் நான்கு விரிவான விளைவுப் பரப்புக்களை இக் கருத்திட்டம் கொண்டுள்ளது.

SEDR கருத்திட்டதிற்கான நிதி ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுவதுடன் இக் கருத்திட்டமானது பிரிட்டிஷ் கவுன்ஸில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் கூட்டிணைந்து  ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் மேற்கொள்ளும் நிலைமாற்றம், நல்லிணக்கம் மற்றும் அனைத்து பகுதியினரையும் உள்வாங்கிய ஜனநாயகப் பங்கேற்பு  (STRIDE) எனும் விரிவான நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அம்சமாகும்.

திட்ட நோக்கம்

ஒட்டுமொத்த நோக்கம்

மக்களுக்கும் அரசுக்கும் இடையே உரையாடல்களைப் பலப்படுத்தி, அதன் மூலம் முரண்பாட்டிற்கு மூலகாரணமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்குப் பங்களிப்புச் செய்தல் மற்றும் உள்ளூர் பிணக்குகள் மேலும் மோசமடைவதைத் தடுத்தல். 

 குறிப்பான நோக்கம்

தனிநபர் ரீதியான மற்றும் சமூக ரீதியான பிணக்குகளுக்குத் தீர்வுகாணும் சேவைகளை மேம்படுத்துதல்.

பயன்விளைவுப் பரப்புக்கள்

பரப்பு 1- தனிநபர்  பிணக்குகளை (குடும்ப, குற்றவியல், சொத்து, நிதி தொடர்பான பிணக்குகள்) தீர்த்துவைப்பதில் சமூக மத்தியஸ்தச் சபைகளின் செயற்பாடுகளை மேம்படுத்துதல். 

பரப்பு 2 - காணி சம்பந்தமான விசேட மத்தியஸ்த சபைகளின் செயற்பாடுகளை விரிவுபடுத்தல் மற்றும் மேம்படுத்துதல்.

பரப்பு 3 - பொதுவான பிரச்சினைகளுக்ககு தீர்வு காண்பதற்கும் மற்றும் சமூக மட்டத்தில் குறைகளை தீர்த்து வைப்பதில் மேம்பாட்டையும் எல்லோரையும் உள்வாங்கிய வகையில் உள்ளூர் செயற்களங்கள் செயற்படுதல். 

 பரப்பு 4 - ஏன், எவ்வாறு மத்தியஸ்தமானது பயன்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பான அதிகரித்துள்ள விழிப்புணர்வு, மேம்பட்ட தரவு சேகரிப்புக்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புக்கள் என்பனவற்றிற்கு ஊடாக மத்தியஸ்த செயன்முறையின் பயன்களை சிரேஸ்ட அதிகாரிகளும் பங்குதாரர்களும் சான்றுபடுத்தும் நிலையில் காணப்படுவர்.  

வேலைத்

திட்டத்தின் செயற்பரப்பு

SEDR Logo Graphic Transparent.png

சமூக மட்டத்தில் தற்போதுள்ள மன்றங்களுடன் SEDR இணைந்து பணியாற்றுகின்றது. சமூக மட்டத்திலுள்ள எதிர்ப்புக் காட்டும் அல்லது செவிசாய்க்கப்படாத தரப்புகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்யக்கூடிய மற்றும் எல்லோரையும் உள்வாங்கும் தன்மையுள்ள அமைப்புகளாக அந்த மன்றங்களின் ஆற்றல்களைக் கட்டியெழுப்புவதற்கும் சமூகங்களுக்கு இடையே கூடுதலான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் SEDR முயற்சி செய்யும். அத்துடன் இச் செயற்தளத்தில்  உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளினால் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளில் சமூகங்களை ஒருமித்துதலும் உள்ளடங்கும். வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய மூன்று மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட சமூகங்களை மையப்படுத்திய வகையில் இச் செயற்பாடுகள் அமையும்.

பிரதேச மட்டத்தில் ஊவா மாகாணத்திலுள்ள இரண்டு மாவட்டங்களில் பயிற்சி வழங்குபவர்களின் ஆற்றல்களைக் கட்டியெழுப்புதல், அவர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், காணி சம்பந்தமான விசேட மத்தியஸ்தச் சபைகளை (SMBs) ஏற்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு உதவுதல் ஆகியவற்றிற்காக நாம் செயற்படுகின்றோம். 

தேசிய மட்டத்தில் மத்தியஸ்த பயிற்சி அலுவலர்களுக்கான பயிற்சிக்கு உதவுதல், தேசிய ரீதியாக சமூக மத்தியஸ்தர்களின் அடுத்த தொகுதியினருக்கு உதவுதல் ஆகிய செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் மத்தியஸ்தத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கு நாம் பணியாற்றுகின்றோம். மத்தியஸ்த சேவைகளுக்கு உதவுதல், அதன் பின்னாலுள்ள நடைமுறைகள் பற்றியும் மத்தியஸ்தச் சபை ஆணைக்குழுவின் பாடசாலை மத்தியஸ்த திட்டத்தின் ஊடாக இளைய தலைமுறையினருக்குக் கிடைக்கும் நன்மைகள் உட்பட பரந்துபட்ட மக்களுக்குக் கிடைக்கும் மத்தியஸ்த செயன்முறையின் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு மற்றும் புரிந்துணர்வை அதிகரித்தல் ஆகியனவும் எமது பணிகளில் உள்ளடங்குகின்றன.

bottom of page