top of page
Sri_Lanka_00090.jpg

தனியுரிமை அறிவித்தல் மற்றும் பாவனை விதிமுறைகள்

எமது வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன், தயவுசெய்து தனியுரிமை அறிவித்தல் மற்றும் பாவனை விதிமுறைகளை வாசியுங்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனான SEDR வேலைத்திட்டமும் (“வேலைத்திட்டம்”)  www.sedrsrilanka.org  என்ற வலைத்தளமும் (“வலைத்தளம்”) (இவையிரண்டும் கூட்டாக “நாம்” எனப்படும்) உங்கள் தனியுரிமையையும் சேமநலனையும் பாதுகாப்பதற்குத் தம்மை அர்ப்பணித்துள்ளன. நாம் எவ்வாறு தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்துப் பயன்படுத்துகின்றோம் என்பதை இத் தனியுரிமைக் கொள்கை எடுத்துக்காட்டுகின்றது. நீங்கள் இந்த வலையமைப்பை அல்லது எமது சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கீழே விபரிக்கப்பட்டுள்ள எமது தனியுரிமை நடைமுறைகளை வாசித்து ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் என்பதை ஒப்புக்கொள்கின்றீர்கள்.

நீங்கள் எமது தனியுரிமை நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இந்த வலைத்தளத்தையோ அல்லது எமது சேவைகளையோ பயன்படுத்தக் கூடாது. இத் தனியுரிமைக் கொள்கை, எமது பாவனை விதிமுறைகளுக்கு அமைவாகவும் அவற்றின் ஓர் பகுதியாகவும் கூட்டிணைக்கப்பட்டுள்ளது.

1. தனிப்பட்ட தகவல்களின் இரகசியத் தன்மை மற்றும் பாதுகாப்பு

எமக்கு அனுப்பப்படுகின்ற தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களின் பாதுகாப்பை அவற்றின் பரிமாற்றத்தின்போதும் அதற்குப் பின்பும் பேணுவதற்கு, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழிற்றுறை நியமங்களையே நாம் பின்பற்றுகின்றோம். எனினும், உங்கள் கணக்கின் இரகசியத் தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், இணையத்தளம் ஊடான எந்தவொரு பரிமாற்ற முறையும் எந்தவொரு இத்திரனியல் களஞ்சியப்படுத்தும் முறையும் முற்றிலும் பாதுகாப்பானது அல்ல. உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்கு நாம் எம்மாலியன்ற சகல முயற்சிகளையும் மேற்கொள்கின்றபோதிலும், அவற்றின் பரிபூரண பாதுகாப்பிற்கு எம்மால் உத்தரவாதம் அளிக்க முடியாது. 

2. நாம் சேகரிக்கக்கூடிய தனிப்பட்ட தகவல்கள்

நீங்கள் எமது அஞ்சல் பட்டியலில் இணையும்போது, நிகழ்வு ஒன்றிற்காகப் பதிவு செய்யும்போது அல்லது வலைத்தளத் தொடர்புப் படிவம் ஒன்றைப் பயன்படுத்தும்போது, நீங்கள் சமர்ப்பிக்கும் தனிப்பட்ட தகவல்களை நாம் சேகரிப்போம். அத்தகைய தகவல்களில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம், கம்பனிப் பெயர் என்பனவும் உட்படும்.

அவற்றைத் தவிர, வலைத்ததளத்தின் மீதான தீங்கிழைக்கும் தாக்குதல்களைக் கண்டுபிடிப்பதற்கும் வலைத்தளச் செயற்பாட்டை நன்கு முகாமைத்துவம் செய்வதற்கும் இடமளிக்கும் முகமாக உங்கள் கணனியின் IP முகவரியையும் நாம் சேகரிக்கக்கூடும்.

நீங்கள் எமது வலைத்தளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்த உங்களுக்கு உதவும் பொருட்டு “Cookie” களையும்  நாம் பயன்படுத்தக்கூடும்.  Cookies என்பது உங்கள் கணனியில் சேமித்து வைக்கப்படும் சிறிய தரவுக் கோப்புகளாகும். Cookies பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்:

நீங்கள் ஒரு கிரமமான பயனர் என்பதை அடையாளம் காண்பதற்கு;

நீங்கள் யார் என்பதை எமக்கு நினைவுபடுத்துவதற்கு;

வலைத்தளத்தின் தொடர்ச்சியான பாவனையைத் தீர்மானிப்பதன் மூலம் எமது பாவனையாளர் கூட்டத்தின் அளவை மதிப்பிடுவதற்கு;

பயனர்களின் அக்கறைகள் மற்றும் நடத்தைகளின் அடிப்படையில் விளம்பரங்களுக்கான இலக்குகளை நிர்ணயிப்பதற்கு;

உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கு;

எமது பாவனையாளர்களின் பழக்கவழக்கங்கள் எவ்வளவுக்கு ஒரே மாதிரியானவை அல்லது வித்தியாசமானவை என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஓர் ஆய்வுக் கருவியாகப் பயன்படுத்த பாவனை முறைகளை அளவிடுவதற்கு;

பாவனை முறைகளை பற்றிய புள்ளிவிபரங்களைத் தொகுப்பதற்கு;

வேறு ஆய்வுகளை நடத்துவதற்கு;

நீங்கள் Cookie ஒன்றைப் பெறும்போது, அதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று தீர்மானிக்கும் வாய்ப்பினை நீங்கள் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அது பற்றி நாம் உங்களுக்கு அறிவிக்கக்கூடிய விதத்தில் உங்கள் உலாவியை (browser) நீங்கள் அமைத்துக்கொள்ளலாம். நீங்கள் Cookieகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இந்த வலையமைப்பிலுள்ள சில பக்கங்கள் சரியாகக் காட்சிப்படுத்தப்பட மாட்டா அல்லது சில தகவல்களைப் பெறுவதற்கு நீங்கள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.

த்தப்பட மாட்டா அல்லது சில தகவல்களைப் பெறுவதற்கு நீங்கள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள். 

 3. தனிப்பட்ட தகவல்களை நாம் பயன்படுத்தக்கூடிய நோக்கங்கள்

நாம் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதற்கான நோக்கங்கள் எவை என்பதை, அத்தகைய தகவல்கள் சேகரிக்கப்படும் நேரத்தில் அல்லது அதற்கு முன்னர் அடையாளம் காட்ட நாம் சகல முயற்சிகளையும் மேற்கொள்வோம். வேறேதும் பாவனைக்கு உங்கள் சம்மதம் பெறப்பட்டிருந்தாலன்றி மற்றும் வேறேதும் பாவனைக்கு சட்டத்தினால் அதிகாரமளிக்கப்பட்டிருந்தால் அல்லது தேவைப்படுத்தப்பட்டிருந்தாலன்றி, சேகரிப்பு நேரத்தில் வெளிப்படுத்தப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாம் பயன்படுத்துவோம்.

பின்வரும் நோக்கங்களுக்காக உங்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதே எமது கொள்கையாகும்:

உங்களுடன் தொடர்புகொள்வதற்கு (செய்திகள், நிகழ்வுகள் மற்றும் புதிய வெளியீடுகள்

தொடர்பில்); 

எமது உள்ளக மதிப்பீட்டு நோக்கங்களுக்காக மட்டும் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும்; 

உங்கள் தேவைகள் மற்றும்/அல்லது விருப்பத்தேர்வுகளை அடையாளம் காண்பதற்கு; 

சட்ட மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைகளை நிறைவேற்றுவதற்கு; 

எமது செயற்பாடுகளை நிர்வகிப்பதற்கு, பேணுவதற்கு, முகாமைத்துவம் செய்வதற்கு மற்றும் முன்னேற்றுவதற்கு; மற்றும்

சட்டத்தினால் தேவைப்படுத்தப்படும் காரியங்களுக்கு.

4. தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல்

நாம் நீங்கள் கோரிய பண்டங்கள் அல்லது சேவைகளை வழங்கும்போது, உங்கள் அனுமதியைப் பெற்றிருக்கும்போது அல்லது பின்வரும் சந்தர்ப்பங்களின்போது தவிர, வேறெந்தச் சந்தர்ப்பத்திலும் இந்த வலைத்தளம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்புகளுக்கு வாடகைக்கு விடவோ, விற்கவோ அல்லது அவற்றுடன் பகிர்ந்துகொள்ளப்படவோ மாட்டாது:

நாம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை எமது வேலைத்திட்டப் பங்காளிகளுடன் பகிர்ந்துகொள்ளக்கூடும்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களின் வெளிப்படுத்துதல் சட்டத்தினால் தேவைப்படுத்தப்பட்டால் மற்றும் எமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மற்றும்/அல்லது எமது வலைத்தளம் தொடர்பான நீதிச் செயலாக்கம் அல்லது சட்ட நடைமுறைக்குப் பணிந்தொழுகத் தேவையானது அல்லது அவசியமானது என்று நாம் கருதினால், நாம் அவற்றைப் பகிர்ந்துகொள்ளக்கூடும்.

சட்டவிரோத நடவடிக்கைகள், சந்தேகிக்கப்படும் மோசடி, ஒரு மூன்றாம் தரப்பின் பௌதிகப் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் என்பவற்றை விசாரிப்பதற்கு, தடுப்பதற்கு அல்லது அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அவசியமென நாம் கருதினால் அல்லது வேறு விதத்தில் சட்டத்தினால் தேவைப்படுத்தப்பட்டால், நாம் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்வோம். 

ஏதேனும் காரணத்திற்காக இந்த வலைத்தளத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், நாம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒரு மூன்றாம் தரப்பு நிறுவனத்திற்கு வழங்கக்கூடும். தனிப்பட்ட தகவல்களின் உரித்தாண்மையில் அல்லது கட்டுப்பாட்டில் செய்யப்படும் அத்தகைய ஏதேனும் மாற்றம் பற்றி உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.

நாம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை எமது சட்ட, நிதி மற்றும் ஏனைய நிபுணத்துவ ஆலோசகர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடும்.

நாம் எமது வலைத்தளத்தைத் தரமுயர்த்தும்போது அல்லது மேம்படுத்தும்போது, தனிப்பட்ட தகவல்களை வலைத்தள வடிவமைப்பாளர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடும்.

சட்டத்தினால் தேவைப்படுத்தப்பட்ட முறையில் உங்கள் சம்மதம் கிடைக்கும்போது நாம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்புகளுடன் பகிர்ந்துகொள்ளக்கூடும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிலைமைகள் தவிர்ந்த வேறெந்தச் சந்தர்ப்பத்திலும் உங்களுடைய அனுமதியின்றி உங்கள் தகவல்கள் எதனையும் நாம் எந்தவொரு மூன்றாம் தரப்புடனும் பகிர்ந்துகொள்ள மாட்டோம்.

5. உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகுதல்

எம்மிடமுள்ள கோப்பிலுள்ள உங்கள் தனிப்பட்ட தகவல்களை நீங்கள் எந்த நேரமும் ஒன்லைனில் அல்லது நேரடியாக மீளாய்வு செய்யலாம், இற்றைப்படுத்தலாம், நீக்கலாம் அல்லது திருத்தலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுக விரும்பினால், எமக்கு எழுத்துமூல வேண்டுகோள் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த எழுத்துமூல வேண்டுகோள் உங்கள் உத்தியோகபூர்வ அடையாள ஆவணத்தின் பிரதியுடன் எமது அலுவலக முகவரிக்குத் தபாலில் அனுப்பப்பட வேண்டும்.

6. தனிப்பட்ட தகவல்களுக்கு மின்னஞ்சல் மூலமான வேண்டுகோள்கள்

உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்காக நாம் ஒருபோதும் மின்னஞ்சல் அல்லது pop-up window மூலம் வேண்டுகோள் விடுக்க மாட்டோம். மின்னஞ்சல் அல்லது pop-up window ஊடான அத்தகைய வேண்டுகோள் கிடைத்தால், தயவுசெய்து அதற்குப் பதிலளிக்க வேண்டாம். அது பற்றி எமக்கு அறிவியுங்கள். நீங்கள் எப்போதாவது ஏதேனுமொரு மோசடிக்கு இலக்காகியுள்ளதாகக் கருதினால், அது பற்றிப் பொலிசாருக்கு அறிவிப்பதுடன் உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு முடியுமான சகல நடவடிக்கைகளையும் எடுங்கள். அத்துடன், உங்களையும் இந்த வலைத்தளத்தின் ஏனைய பயனர்களையும் எமது சேவைகளையும் பாதுகாப்பதற்கு இயலுமான சகல நடவடிக்கைகளையும் எடுக்க எமக்கு இடமளிக்கும் பொருட்டு அது பற்றி எமக்கும் அறிவியுங்கள்.

7. பிள்ளைகள்

பிள்ளைகளின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இந்த அர்ப்பணிப்பின் முன்னெடுப்பாக, எமது வலைத்தளத்தின் பாவனை, எமது சேவைகளின் மதிப்பீடு என்பவற்றிற்கான உரிமையை பதினெட்டு (18) அல்லது அதற்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு மட்டுமென வரையறை செய்துள்ளோம்.

 8. தனிப்பட்ட தகவல்களை இடம்மாற்றுவதற்கும் களஞ்சியப்படுத்துவதற்குமான சம்மதம்

நீங்கள் எமக்கு வழங்கும் ஏதேனும் தனிப்பட்ட தகவல்களை களஞ்சியப்படுத்தி வைக்கவும் களஞ்சியப்படுத்தல் நோக்கங்களுக்காக மட்டும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உலகிலுள்ள வேறு சேவையகங்களுக்கு இடமாற்றம் செய்யவும் நாம் உரிமை கொண்டுள்ளோம். நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எமக்கு வழங்குவதன் மூலம் அத்தகைய தகவல்கள் உலகெங்குமுள்ள எமது சேவையகங்களுக்கு அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுக் களஞ்சியப்படுத்தப்படும் என்பதை நன்கு புரிந்துகொண்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கின்றீர்கள்.

9. உங்களுடனான தொடர்பு

சட்டத்தினால் தேவைப்படுத்தப்பட்ட அறிவித்தல்களை அனுப்புவதற்காக, இந்த வலைத்தளம் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக அல்லது ஏதேனும் முறைப்பாட்டைத் தீர்த்துவைப்பதற்காக காலத்திற்குக் காலம் உங்களுடன் தொடர்புகொள்வதற்கு நாம் உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தக்கூடும். எமது சேவைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அறிவிப்பதற்கு, வாடிக்கையாளர்களுக்கான சலுகை வழங்கல்களை முன்வைப்பதற்கு அல்லது எமது செய்தி மடல்களை உங்களுக்கு அனுப்புவதற்கு தபாலை அல்லது மின்னஞ்சலைப் பயன்படுத்துவதற்கும் நாம் உரிமை கொண்டுள்ளோம். உங்கள் அங்கத்துவ அமைப்புகளை மாற்றுவதன் மூலம் அல்லது கீழே பிரிவு 12இல் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் எம்முடன் தொடர்புகொள்வதன் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் எமது அஞ்சல் முறைமத்திலிருந்து விலகுவதற்கு (“opt-out”) முடிவு செய்யலாம்..

10. இத் தனியுரிமைக் கொள்கைக்கான மாற்றங்கள் மற்றும் இற்றைப்படுத்தல்கள்

நாம் இத் தனியுரிமைக் கொள்கையை எமது தற்றுணிபிற்கேற்ப எந்த நேரத்திலும் எவ்வித முன்னறிவித்தலுமின்றி திருத்த முடியும். ஏதேனும் முக்கிய மாற்றங்கள்; செய்யப்பட்டால், எமது வலைத்தளத்திலுள்ள ஒரு முக்கியமான இடத்தில் அவற்றைப் பிரசுரிப்பதன் மூலம் நாம் அத்தகைய மாற்றங்களை உங்களுக்கு அறிவிப்போம். காலத்திற்குக் காலம் நீங்கள் எம்முடன் தொடர்புகொண்டு ஏதேனும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என்பதைக் அறிந்துகொள்ள வேண்டும்.  

நாம் சேகரிக்கும் தகவல்களின் உபயோகம், அவ்வாறான உபயோகம் மேற்கொள்ளப்படும் நேரத்தில் நடைமுறையிலிருந்த தனியுரிமைக் கொள்கைக்கு அமைவானதாக இருக்கும் என்பதைத் தயவுசெய்து கவனிக்கவும்.

11. ஏனைய சட்ட அறிவித்தல்கள்

தனியுரிமை அல்லது பாதுகாப்பு குறித்து உங்களுக்கு எப்போதாவது ஏதேனும் சர்ச்சை ஏற்படுமாயின், அது இத் தனியுரிமைக் கொள்கைக்கும் எமது பாவனை விதிமுறைகளுக்கும் உட்பட்டதாக அமையும். இத் தனியுரிமைக் கொள்கை தொடர்பில் எழக்கூடிய தனியுரிமை சம்பந்தமான ஏதேனும் பிரச்சினை உங்களுக்கு இருந்தால், அதனைத் தீர்த்துவைப்பதற்கு நாம் எப்போதும் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

12. எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்

இத் தனியுரிமைக் கொள்கை சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகுதல் தொடர்பில் மேலதிக விபரங்கள் தேவைப்பட்டால் அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிய விரும்பினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வழியில் எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்:

பிரிட்டிஷ் கவுன்ஸில்

49 அல்பிரட் ஹவுஸ் கார்டின்ஸ்

கொழும்பு 00300

இலங்கை

இத் தனியுரிமைக் கொள்கை கடைசியாக 2021 ஜனவரி 31இல் மாற்றியமைக்கப்பட்டது.

bottom of page