நமது
பங்காளிகள்
SEDR வேலைத்திட்டத்திற்கான நிதியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குகின்றது. ஏஷியா பவுண்டேஷனின் பங்காளித்துவத்துடன் பிரிட்டிஷ் கவுன்ஸில் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.
பங்காளிகள்
அமுலாக்கப் பங்காளிகள்
SEDR என்பது பிரிட்டிஷ் கவுன்ஸில் அமுல் செய்யும் ஒரு நான்காண்டு (2020-2024) வேலைத்திட்டமாகும். இலங்கையில் நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ள பிரிட்டிஷ் கவுன்ஸில், சிவில் சமூக ஈடுபாடுகளுக்கு உதவி வழங்குவதிலும் மற்றும் எல்லோரையும் உள்ளடக்கிய வகையில் குடிமக்களின் ஈடுபாட்டை பேணி வளர்ப்பதிலும் பல தசாப்தகால அனுபவத்தைப் பெற்றுள்ளது. SEDR இன் 3ஆவது மற்றும் 4ஆவது பயன்விளைவுப் பரப்புக்களின் அமுலாக்கத்திற்கு பிரிட்டிஷ் கவுன்ஸில் தலைமை தாங்கும்.
SEDR வேலைத்திட்டத்தின் மற்றுமொரு பங்காளி ஏஷியா பவுண்டேஷன் ஆகும். பிணக்குத் தீர்வுக்கான ஒரு மாற்று வழியாக மத்தியஸ்தத்தை ஊக்குவிக்க நிதியமைச்சிற்குத் தொழில்நுட்ப உதவியை வழங்கியதன் மூலம் ஏஷியா பவுண்டேஷன் பெற்ற பல்லாண்டுகால அனுபவத்தை இக் கருத்திட்டத்தின் அமுலாக்கத்தில் பயன்படுத்திக்கொள்ள இருக்கின்றது. SEDR இன் 1ஆவது மற்றும் 2ஆவது பயன்விளைவுப் பரப்புக்களின் அமுலாக்கத்திற்கு ஏஷியா பவுண்டேஷன் தலைமை தாங்கும்.
SEDR க்கான நிதியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குகின்றது. இந்த வேலைத்திட்டம், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் மேற்கொள்ளும்; நிலைமாற்றம், நல்லிணக்கம் மற்றும் அனைத்து பகுதியினரையும் உள்வாங்கிய ஜனநாயகப் பங்கேற்பு (STRIDE) எனும் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.
சிவில் சமூக அமைப்பு (CSO) பங்காளிகள்
உள்ளூர் சமூகங்களை அணுகி, மாற்றுவழிப் பிணக்குத் தீர்வுக்கான பல்வேறு முயற்சிகள் மற்றும் முன்முயற்சிகள் தொடர்பில் அவற்றிற்கு உதவுவதற்காக SEDR உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளுடன் பங்காளித்துவத்தை ஏற்படுத்தும்.
நிறுவன ரீதியான பங்காளிகள்
கொள்கை மட்டத்தில் எமது பணிகளை மேம்படுத்துவதற்காக, நாம் தேசிய நிறுவனங்கள் பலவற்றுடன் நெருங்கிய பங்காளித்துவத்தை ஏற்படுத்திக்கொண்டு எமது பணிகளை முன்னெடுக்கின்றோம். இத்தகைய நிறுவனங்களுள் நீதியமைச்சு, பொதுச் சேவைகள் அமைச்சு, கல்வி அமைச்சு, இளைஞர் விவகார அமைச்சு, மகளிர் விவகார அமைச்சு என்பன உள்ளடங்கும். மாற்றுவழி பிணக்குத் தீர்வுகள் மற்றும் மத்தியஸ்த சேவைகளின் அபிவிருத்திக்கு உதவும் வகையிலான ஒத்துழைப்பை வழங்குவதில் மேற்படி நிறுவனங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.