
நான், இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் உள்ள தலாகும்புர கிராமத்தில் செயல்படுத்தப்படும் SEDRxActiveCitizens [1] இன் சமூக செயற்பாட்டு திட்டங்கள் (SAP) இன் நிருபர், பியுமி நிசன்சலா (22).
ஊவா மாகாணத்தைச் சேர்ந்த 24 பெண்கள் மற்றும் இளைஞர்கள் அடங்கிய குழுவுடன் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதியுதவியுடன் Uva Shakthi Foundation மூலம் நடத்தப்படும் SEDRxActiveCitizens பயிற்சி அமர்வுகள் தொடரில் பங்கேற்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்தப் பயிலரங்குகள், ப்ரொஜெக்ட் வடிவ திட்டங்கள் எவ்வாறு அமைகின்றன என்ற கண்டுபிடிப்பின் பயணத்தில் நம்மை அழைத்துச் சென்று, மாற்றுவழி பிணக்குத் தீர்வு (ADR) வழிமுறைகள் மூலம் பிணக்குகளை நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், சமூக அளவிலான குறைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் சமூக நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கும் தேவையான கருவிகளை எங்களுக்கு வழங்கியது.
முதல் பயிற்சியின் மூலமே நான் தனிப்பட்ட முறையில் மாற்றப்பட்டேன். ‘அனைவருக்கும் வெற்றி’ ஈட்டும் தீர்வுகளை உருவாக்கும் ADR இன் திறனைப் பற்றி அறிந்துகொள்வதுடன், எந்தவொரு வெற்றிகரமான ADR செயல்முறைக்கும் அடிப்படையான – தொடர்பாடல் -என்னும் திறமையை எவ்வாறு திறம்பட செயல்படுத்துவது என்பதையும் கற்றுக்கொண்டேன். எனது இளம் வயசு மற்றும் பார்வையாளர்களுக்கு முன்னால் பேச இருந்த தயக்கம் என்னில் உண்டாக்கிய பதட்ட நிலை, ADR வழிகாட்டியின் பயிற்சியால் படிப்படியாக மறைந்தது. எனது குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து, அரசாங்க அதிகாரிகளுடன் எவ்வாறு ஈடுபடுவது, கருத்துக்களை சேகரிப்பது மற்றும் நாங்கள் தொடங்கிய சமூக நடவடிக்கையில் அவர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் எனது சமூகத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் திறம்பட தொடர்புகொள்வது எப்படி என்பன எனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.
தலாகும்புர மற்றும் அதை உள்ளடக்கிய மூன்று உள்ளூர் பகுதிகளான இஹலகம, பஹலகம மற்றும் ஏபலகம ஆகிய இடங்களில் முரண்பாடுகளின் ஒரு குறிப்பிட்ட மூலத்தை நாங்கள் அடையாளம் கண்டோம். தலாகும்புரவில் நிகழும் பொது மற்றும் சமூக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை உள்ளூர் சமூகங்கள் அணுகுவதில் - பல தகவல் தொடர்பு இடைவெளிகள் காரணாமாகவும் ஓரளவு ஏற்படுகின்ற - பற்றாக்குறை இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.
2019ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் ஒரு முக்கியமான உர விநியோக முயற்சி பற்றிய செய்திகள் மற்ற இரண்டு பகுதிகளுக்கு அறிவிக்காமல் ஒரு பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டது சமூகங்களுக்கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியபோது, இவை எழுந்தன. பெண்கள் அமைப்புகள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் உட்பட பெரும்பான்மையான கிராமக் குழுக்களில், பஹலகம பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் இந்தப் பதட்டங்கள் அதிகரித்தன. இஹலகம மற்றும் ஏபலகம வாசிகளின் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்ததால், தலாகும்புரவில் வசிப்பவர்கள் என்ற வகையில் அவர்களின் குரல் மற்றும்
எனவே, அடையாளம் காணப்பட்ட இந்த பிணக்குகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, எங்கள் சமூக செயற்பாட்டு திட்டத்துக்கு ‘சகவாழ்வை மதிக்கும் ஒரு தொடர்புப் பிணைப்பு’ என்று அர்த்தம் தரும் ‘சஹஜீவனய அகயன சன்னிவேதன சபெந்தியாவக்’ என்று பெயரிட்டோம். மேலும் SEDRxActiveCitizens முறையின்படி பலவிதமான சமூக நடவடிக்கைகளைத் திட்டமிட்டோம். அதன் பெயர் குறிப்பிடுவது போலவே, எங்கள் செயற்பாடுகள் மூலம் பயனுள்ள தொடர்பை ஏற்படுத்த முயன்றோம். அதில் எங்கள் தொலைநோக்கு மற்றும் கிராமத்திற்கான நோக்கம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துதல் மற்றும் தலாகும்புர கிராம அலுவலர் (GN) பிரிவுகளில் பணியாற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் இலக்கு சமூகங்களின் தலைவர்களின் ஆதரவைப் பெறுதல் ஆகியவை அடங்கும். சமூகத் தலைவர்களுக்காக உள்ளூர் அளவிலான முரண்பாடுகளைக் கையாள்வதில் தேவைப்படும் அவர்கள் மனப்பான்மை, தகவல் தொடர்பு திறன் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு அமர்வையும் நாங்கள் மேற்கொண்டோம்.
ADR பயிற்சியில் நாங்கள் கற்றுக்கொண்டதை நாங்கள் பயிற்சி செய்து, ' அனைவருக்கும் வெற்றி' ஈட்டும் தீர்வுக்காக பாடுபட்டோம். அங்கு நாங்கள் நேரடியாக தீர்வுகளை வழங்காது, மாறாக கலந்துரையாடல் மற்றும் உரையாடல் மூலம் அமர்வுகளை மத்தியஸ்தம் செய்தோம். இதன் விளைவாக தாக்கப்பட்ட குழுக்கள் தகுந்த தீர்வுகளைக் தம்மாகவே கொண்டுவந்தன. இந்த செயல்முறையின் அடிப்படையில், தலாகும்புர கிராம அலுவலர் (GN) பிரிவுகளில் உள்ள அரசாங்க ஊழியர்கள், சமூக சேவைகளை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் angu seyalpadum அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் , ஒவ்வொரு கிராமத்திலும் வசிப்பவர்கள் பற்றிய தகவலுடன் கூடுதலாக இரண்டு கோப்பகங்களை (ஒறு கடின பிரதி மற்றும் மின்னணு வடிவத்தில்) உருவாக்குவதில் உள்ளூர் சமூகங்களை நாங்கள் ஆதரித்தோம். மேலும் நாங்கள் WhatsApp குழுவை நிறுவுவதை நாங்கள் ஆதரித்தோம், இதன் மூலம் அனைத்து சமூகத் தலைவர்களும் ஒருவரையொருவர் மிகவும் சுறுசுறுப்பாக தொடர்பு கொள்ளவும் ஒருங்கிணைக்கவும் முடியும். மேலும் அது மூலம் சிறந்த புரிதள் உருவாகி, தகவல்கள் வெளிப்படைத் தன்மையில் தெரிவிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகும்.
இந்தத் திட்டமும் நாங்கள் பெற்ற ADR பயிற்சியும், நாங்கள் எங்கள் சமூக நடவடிக்கையை செயல்படுத்திய உள்ளூர் சமூகங்களில் சிறந்த தகவல்தொடர்பு மற்றும் மேம்பட்ட ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இளைஞர்களிடையேயும் கூட அது உருவாக காரணம் ஆகியது. இது எங்களுக்கு பல திறன்களை அளித்தது: ஒரு பிணக்குக்கான மூல காரணத்தை எவ்வாறு கண்டறிவது மற்றும் மத்தியஸ்தத்தின் நன்மைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நாங்கள் அறிந்துக்கொண்டோம். மேலும், ஒரு திட்டத்தை வடிவமைத்தல் மற்றும் பட்ஜெட் திட்டமிடல், அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் கண்காணிப்பு அடிப்படையில் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றிய தொழில்நுட்ப அம்சங்களையும் கற்றோம். முக்கியமாக, பலதரப்பட்ட கருத்துக்களை மதிக்கும் அதே வேளையில், எங்கள் குழுவிற்குள்ளும், பொதுவான இலக்கை நோக்கியும் எவ்வாறு பணியாற்றுவது என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனான SEDR திட்டத்தின் மூலம் சாத்தியமான இந்த அனுபவங்கள், எனது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் எனது சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் மட்டுமல்லாமல், இளம் இலங்கையர்களின் குழுவாக, ‘அனைவருக்கும் வெற்றி’ ஈட்டும் மத்தியஸ்தத்தின் முக்கியத்துவத்தை உணரவும் எங்களுக்கு உதவியது.
[1] Active Citizens என்பது கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடல் மற்றும் சமூக தலைமையிலான சமூக மேம்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு சமூக தலைமைத்துவ பயிற்சி முறையாகும். இது, சமூக அளவிலான பிணக்குகளைத் தீர்ப்பதில் மாற்றுவழி பிணக்குத் தீர்வு வழிமுறைகளை ஆதரிக்கும் SEDR இன் அணுகுமுறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Comments