top of page

அந்தோணியார்புரத்தில் இன்னல்களுக்கு மத்தியில் புரிந்துணர்வை உருவாக்குதல்

Updated: Aug 7


நான் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள அந்தோனியார்புரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருள்நேசராசா அனுஷன் (28). மேலும் நான் "அந்தோனியார்புரத்தில் அமைதி மற்றும் செழிப்பு" என்ற சமூக செயற்பாட்டு திட்டத்தின் (SAP) குழுத் தலைவரும் ஆவேன்.


எனது கிராமத்தில் பெரிய, இயந்திரமயமாக்கப்பட்ட ஃபைபர் கிளாஸ் படகுகளின் உரிமையாளர்களுக்கும், கைமுறையாக இயக்கப்படும் பாரம்பரிய வள்ளப் படகுகளின் உரிமையாளர்களுக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது. பொதுவாக,  ஃபைபர் படகுகள் சமூகத்தின் பணக்கார உறுப்பினர்களுக்கு சொந்தமானது, ஏழை மீனவர்கள் வள்ளங்களை வைத்திருந்தனர். இந்த பிணக்கு முதன்மையாக வளங்களின் சமமற்ற விநியோகத்தால் உந்தப்பட்டது. இது, இரு மீனவர் குழுக்களிடையே கால்வாய் பகுதியில் தங்கள் மீன்களை உள்ளூர் விற்பனையாளர்களுக்கு விற்பதில் போட்டி ஏற்படுத்தியது. ஃபைபர்  படகுகள் தங்கள் வேகம் மற்றும் அளவு காரணமாக கால்வாய் பகுதியை அணுகுவதில் பாரம்பரிய படகு உரிமையாளர்களை விட முன்னிலை கொண்டிருந்தமை இரு தரப்பினருக்கும் இடையே பல பிணக்குகளுக்கு வழிவகுத்தது.





எங்கள் கிராமத்தின் நல்லிணக்கத்தை எதிர்மறையாக பாதிக்கும் வகையில் இப்பிணக்குகள் அடிக்கடி அதிகரித்தன. இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, நானும் எனது குழுவும் எங்களின் Active Citizens பயிற்சி மூலம் பெற்ற அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்தி, உள்ளூர் சனசமூக அமைப்பொன்று மற்றும் மீன்பிடி கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுக்கு இடையேயான உரையாடலை வழிநடாத்தினோம், அத்துடன் ஃபைபர் மற்றும் வல்லம் உரிமையாளர்கள் இடையே கலந்துரையாடலை இலகுப்படுத்தினோம். சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளின் ஈடுபாடுடன்  கூடிய இந்த பூர்வாங்கக் கூட்டங்கள், குழுக்களுக்கிடையே போட்டிக்கான காரணங்களை புரிந்துகொள்வதற்கும், ஒரு பெரிய சமூக உரையாடலுக்கான களத்தை அமைப்பதற்கும் உதவியது, மேலும் அங்கு எங்கள் சமூக செயற்பாட்டுத் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் வழிமுறைகளை நாங்கள் விளக்கினோம்.


சமூகத்தை ஒன்றிணைக்க, தெற்காசிய கிறிஸ்தவ சமூகங்களில் பொதுவான ஒருங்கிணைந்த சமய அணுகுமுறையின் ஒரு வடிவமான ' அன்பியம் ' என்ற கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கருத்தை நாங்கள் பயன்படுத்தினோம். இது 10-15 குடும்பங்களை ஒன்றுசேர்த்து உணவைப் பகிர்ந்துகொள்வதற்கும் கூட்டாக பழகுவதற்கும் இடம் கொடுத்து, ஒற்றுமை உணர்வை வளர்ப்பதற்கும், புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும்  அவகாசம் அளிக்கப்பட்டது. கூடுதலாக, நாங்கள் ஒரு வெற்றிகரமான சமூக சிரமதான நடவடிக்கையை ஏற்பாடு செய்தோம், இதற்கு முன்பு பங்கேற்காதவர்களின் பலரின் பங்கேற்ப்பும் கிடைக்கப்பெற்றது.

அன்பியம் மற்றும் சிரமதான நடவடிக்கைகள், சமூக உறுப்பினர்களிடையே (குறிப்பாக, மீனவர்களிடையே) உரையாடலுக்கான இடத்தை வழங்கியது, பிணக்கில் சிக்கிய குழுக்களிடையே சிறந்த புரிதலை உருவாக்கியது, மேலும் இரு குழுக்களின் மீனவர்களுக்கும் கால்வாயின் சமமான அணுகலை பெற வழிவகுத்தது.


எங்கள் கிராமத்தின் நல்லிணக்கத்தை எதிர்மறையாக பாதிக்கும் வகையில் இப்பிணக்குகள் அடிக்கடி அதிகரித்தன. இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, நானும் எனது குழுவும் எங்களின் Active Citizens பயிற்சி மூலம் பெற்ற அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்தி, உள்ளூர் சனசமூக அமைப்பொன்று மற்றும் மீன்பிடி கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுக்கு இடையேயான உரையாடலை வழிநடாத்தினோம், அத்துடன் ஃபைபர் மற்றும் வள்ளம் உரிமையாளர்கள் இடையே கலந்துரையாடலை இலகுப்படுத்தினோம். சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளின் ஈடுபாட்டுடன் பெறுவது ஆகியவற்றில் விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெற்றுள்ளோம், மேலும் இவ் அனுபவங்கள்  எங்கள் உள்ளூர் சமூகத்தில் புது திட்டங்களைத் தொடங்குவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் எங்கள் திறனை மேம்படுத்தும்.





ADR பயிற்சியானது எங்கள் திட்டத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது - மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஒரு Active Citizens தன்னார்வத் தொண்டராகத் தீவிரமாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்க சாதனையாகும். ADR பயிற்சியின் கற்றல் மற்றும் சமூகப் பணியில் எனது ஈடுபாடு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, எனது கிராமத்தில் உள்ள கிராமப்புற மேம்பாட்டு சங்கத்தின் (RDS) நிர்வாகக் குழு உறுப்பினராகி, இந்த முறையைப் பயன்படுத்தி பிணக்குகளைத் தீர்க்க விரும்புகிறேன். எனது கிராமத்தின் நிலையான வளர்ச்சிக்கு இளைஞர்களின் சுறுசுறுப்பான பங்கேற்பு மற்றும் சமூக நடவடிக்கைகளில் அங்கீகாரம் இன்றியமையாதது என்று நான் நம்புகிறேன்.

27 views0 comments

Comments


bottom of page