top of page

பிரிவுகளைக் கடந்து, செயலில் உள்ள குடியுரிமை (Active Citizenship) மூலம் இளைஞர் சமுதாயத்தை மேம்படுத்துதல்

sakshiselvanathan

எனது பெயர் திவ்யா பிரசாந்தி (21). நான் மீரியபத்த 'ரெயின்போ டீம்’ இன் Active Citizens குழு தலைவியாவேன். எங்கள் கிராமத்தில் ஒரு தொடர்ச்சியான பிரச்சனையை நாங்கள் கவனித்தோம்: அதாவது, கலைமகள் தெரு மற்றும் கோயில் தெரு ஆகிய இரு தெருக்களில் வசிப்பவர்களுக்கு இடையே இருக்கும் பதற்றம். இரண்டு தெருக்களும் ஒரே மீரியபெத்த கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்தவையாக இருந்த போதிலும், இரண்டு குழுக்களுக்கிடையில் சிறிய விஷயங்களுக்கு கூட அடிக்கடி பிணக்குகள் ஏற்பட்டன. இவற்றின் ஆரம்பம் சில தசாப்தங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு முடிவிலிருந்து எழுந்தன, இதில் உள்ளூர் பள்ளி உதவித்தொகைகள் ஒரு தெருவில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. இது பல தவறான புரிதல்களுக்கான தொடக்க புள்ளியாக இருந்தது. இதனால் பதட்டங்கள் நேர்ந்தன, மற்றும் உள்ளூர் சமூகத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமையை அதிகரிக்க கூடிய கிராம நடவடிக்கைகளில் இரு தரப்பிலிருந்தும் குறைந்த பங்கேற்பும் காணப்பட்டது.


மத நடவடிக்கைகளில் கூட்டு பங்கேற்பு அத்தகைய ஒரு உதாரணம். உண்மையில், பிணக்குகள் அதிகரித்ததால், பொதுவாக இரு தெருக்களும் பகிர்ந்து கொண்ட இந்து கோவிலுக்குச் செல்வதை கிராமவாசிகள் நிறுத்தினர், அதனாலே அது ஒரு பாழடைந்த நிலைக்கு விழுந்தது. அதற்கு பதிலாக, ஒரு தெருவில் உள்ள கிராம மக்களின் பயன்பாட்டிற்காக மாத்திரம் மற்றொரு கோவில் கட்டப்பட்டது.


இரண்டு தெருக்களுக்கு இடையே உள்ள பதட்டங்கள் உள்ளூர் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தன: சமீபத்தில் ஒரு அரசு சாரா அமைப்பு (NGO) கிராமத்தில் நீர் உள்கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்த முயற்சித்தபோது, இரண்டு தெருக்களின் குடியிருப்பாளர்களிடையே ஒத்துழைப்பு இல்லாததால், அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி தங்கள் திட்டத்தை முடிக்க நேர்ந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் கூடிய ‘பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்ப்பதற்கு ஆதரவளித்தல்’ (SEDR) திட்டத்தின் மூலம் மாற்றுவழி பிணக்குத் தீர்வு (ADR) பயிற்சி பெற்ற Active Citizens குழுவாக, நாம் இதை ஒரு பிரச்சனையாகக் கண்டறிந்தோம் : எமது குறிப்பிட்ட தலையீடுகள் மூலம் இரு தெருக்களுக்கு இடையே பரஸ்பர புரிதலை மத்தியஸ்தம் செய்ய வேண்டிய தேவை இருந்தது.


ஆனால், Active Citizensகளாக நாம் முன்னெடுத்த பணயனத்தில் சவால்கள் இல்லாமல் இல்லை. நேர மேலாண்மை, குழு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், போட்டியிடும் தேவைகளை நன்கு புரிந்துகொள்வது மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெறுதல், இவை அனைத்தும் நாம் ஒன்றாகக் கடக்க வேண்டிய தடைகளை முன்வைத்தன. இந்தப் பொறுப்புகளுடன் என்னுடைய தொழிலைச் சமநிலைப்படுத்துவதிலும் சிரமங்கள் ஏற்பட்டன. ஆனால் நான் குறிப்பாக பொதுப் பேச்சு மற்றும் தலைமைத்துவம் ஆகிய புதிய திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் விடாமுயற்சியுடன் செயல்பட்டேன்.


ஒரு குழுவாக நாங்கள் எங்கள் வயது மற்றும் வளர்ச்சியடையாத கிராமத்தின் காரணமாக பாகுபாட்டை எதிர்கொண்டோம்: உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆரம்பத்தில் எங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, மேலும் சமூக பிணக்குகளை தீர்ப்பதில் ஈடுபட நாங்கள் மிகவும் இளமையாகவும் முக்கியமற்றவர்களாகவும் காணப்படுவதாக கருதி எங்களிடமிருந்து தகவல்களைக் கூட மறைத்தார்கள். எவ்வாறாயினும், இதனால் நான் மனம் தளராது ஊவா மாகாணத்தில் உள்ள SEDR இன் பங்காளி அமைப்பான Uva Shakthi Foundationஇன் உதவியுடன் தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையை சமர்ப்பித்தேன். இந்த வெற்றிகரமான முறையீடு ஒரு குழுவாக இரு தெருகளிலும் வசிப்பவர்களுக்கு நடமாடும் நிர்வாக சேவையை ஏற்பாடு செய்ய உதவியது. இது பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்கள் இல்லாத கிராமவாசிகள் ஒரே நாளில் அவற்றைப் பெற உதவியது. இறுதியில், எங்களின் திறமைகளை சந்தேகித்த அதே அரசாங்க அதிகாரிகளே, இந்த பொதுச் சேவையை அனைவருக்கும் அணுகுவதற்கு எங்களுக்கு உதவியது. இது இரு தெருக்களிலும் வசிப்பவர்களுக்கு பயனளித்து, மேலும் உள்ளூர் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை வளர்ப்பதற்கு பங்களித்தது.


எங்களின் புதிய ADR அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்தி, சமூக சேவையில் ஈடுபட, அல்லது இன்னும் குறிப்பாக, 'கோவில் சிரமதான' வேளைகளில் ஈடுபடுவதற்காக இரு தெருக்களிலும் உள்ள கிராம மக்களை ஒன்று திரட்டினோம். இது முன்னர் கைவிடப்பட்ட கோவிலை கூட்டாக சுத்தப்படுத்துவது மற்றும் எதிர்காலத்தில் அது சரியாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதையும் உள்ளடக்கியது. அது கிராம மக்கள் தங்கள் வேறுபாடுகளை நன்கு புரிந்துகொள்வதற்கும், அவற்றை மீறி மத விழாக்களில் ஒன்றாக பங்கேற்கவும் அவர்களுக்கு உதவும். கட்டிடத்தின் பராமரிப்பை மேற்பார்வையிடக்கூடிய கோவில் நிர்வாகக்குழுவை நிறுவுவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம், மேலும் அதன் நிறுவன கட்டமைப்பு இரண்டு தெருக்களில் உள்ள கிராம மக்களையும் சமமாக உள்ளடக்கியது.


எங்களின் தலையீடுகள் அங்கு முடிவடையவில்லை. SEDR வழங்கும் Active Citizens பயிற்சியின் ஊடாக பெற்ற நுண்ணறிவு மூலம், எங்கள் கிராமத்தில் மாற்றம் மற்றும் அமைதிக்கான ஊக்கியாக இளைஞர் சமூகத்தை அடையாளம் கண்டு அவர்கள் இச்செயல்களில் பங்கேற்பதை உறுதி செய்தோம். நாங்கள் எங்கள் முன்முயற்சிகள் மற்றும் செயல் திட்டங்களில் விளையாட்டை ஒருங்கிணைத்தோம், இறுதியில் இரு தெருக்களில் இருந்தும் இளம் பெண்களும் ஆண்களும் ஒரே அணியில் போட்டியிடும் கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்தோம். சமீபத்தில், கிரிக்கெட் போட்டிகளில் முழு மீரியபெத்த கிராமத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒரு கூட்டு அணியாக மிகவும் திறமையான கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்ய இரு தெருக்களும் இணைந்து செயல்பட்டன.


இவ்வாறான தலையீடுகளினூடாக சிறந்த பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் மூலம் உள்ளூர் பிரச்சனைகளை தீர்க்க, சமூக தலைமை மற்றும் நடவடிக்கை என்ற கருத்துக்களை பயன்படுத்தினோம் .


Active Citizensகளாக, நானும் எனது குழுவும் எங்கள் கிராமத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றோம் என்பதைச் சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன். எங்கள் கூட்டு முயற்சிகள் கலைமகள் தெரு மற்றும் கோயில் தெரு இடையே நீடித்து வந்த பிணக்கை மத்தியஸ்தம் செய்தது மட்டுமல்லாமல், இளைஞர்களை தாங்களாகவே ‘மாற்றத்தின் முகவர்களாக’ ஆகவும் உதவியது. ஒரு Active Citizenஆக எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில், எனது உள்ளூர் சமூகத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த எனது சொந்த திறன்களையும் ஆற்றலையும் பயன்படுத்த நான் ஊக்குவிக்கப்படுகிறேன்.


Comments


எமது செய்தி மடலுடன் இணையுங்கள்

SEDR இலிருந்து காலாண்டு இற்றைப்படுத்தல்களைப் பெறுவதற்குப் பதிவு செய்யுங்கள். சமீபத்திய பயிற்சிகள், CSO நடவடிக்கைகள் மற்றும் விசேட நிகழ்வுகள் பற்றி நாம் உங்களுக்கு அறிவிப்போம்.

 சமர்ப்பித்தமைக்கு நன்றி!

தொடர்பு

கொள்ளுங்கள்

எம்மிடம் வாருங்கள்

Supporting Effective Dispute Resolution

19, 1/1, De Fonseka Place

00400 Colombo,

Sri Lanka.

எமக்கு எழுதுங்கள்

சமூக ஊடகங்களில் எம்மைப் பின்தொடரவும்

  • Twitter
  • Facebook logo
LOGOs FInal-04.png

HOME          ABOUT           PARTNERS           IMPACT           RESOURCES          OPPORTUNITIES           CONTACT           PRIVACY   

This website was created and maintained with the financial support of the European Union. Its contents are the sole responsibility of the British Council and do not necessarily reflect the views of the European Union.

© 2021 by Supporting Effective Dispute Resolution, British Council

bottom of page