top of page

Diversity creates dimension


நான் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள சிலாவத்துறையைச் சேர்ந்த அமீருன் நிஷா. நான் ஒரு பெருமிதம் கொண்ட ஒற்றைத் தாய் மற்றும் ஒரு சமூக ஆர்வலராக இருக்கிறேன். தீர்வுகளுக்காக காத்திருப்பதற்குப் பதிலாக, பெண்களாகிய நாம் ஒன்றாக, எங்களுக்கான தீர்வுகளை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். நான் பல ஆண்டுகளாக ஒரு சமூக ஆர்வலராக இருந்து வருகிறேன், மேலும் சமூகப் பணி என்பது பல ஒழுங்குமுறைகளைக் கொண்டிருப்பதையும், விடயங்களை வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்த்து ஒருமித்த கருத்தை உருவாக்குகின்றதாகவும் காண்கிறேன்.

ஒரு SEDR Active Citizen ஆக இருப்பதும் Active Citizens பயணத்தைப் பின்தொடர்வதன் மூலம், நாங்கள் ஆர்வமாக இருந்த ஒன்றை எடுத்து மாற்றத்தை ஏற்படுத்த எங்கள் திறமைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய முடிந்தது. நிறுவன மற்றும் தொழில்முறை நெட்வொர்க்குகள், அதிகாரமும் அது தொரப்பான நடத்தைகள், மாற்றுவழி பிணக்குத் தீர்வு அணுகுமுறைகள் மற்றும் குழுப்பணி ஆகியவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொண்ட அதே வேலை, எங்கள் பிரச்சனைகளை ஆராய்ச்சி மூலம் எவ்வாறு வழிநடத்துவது என்பதையும் நாங்கள் கற்றுக்கொண்டோம்.

நமது சமூகத்திற்காகப் பணியாற்றுவது ஊக்கமளிக்கும் காரணியாக இருந்தாலும், நமது மத சடங்குகள், நம்பிக்கைகள் மற்றும் வரம்புகள் காரணமாக நாங்கள் அதே சமூகத்திலிருந்து எழும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பாலினம், ஜாதி, மதம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் மக்களை ஒன்றிணைக்கும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் போராடினோம். எந்தவித பாகுபாடும் இன்றி அனைவரையும் உள்ளடக்கி மாற்றுவழி அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஒரு சமூகமாக முன்னோக்கிச் செல்வதற்கு அவர்களை ஒன்றிணைக்க அனைவரின் தேவைகளையும் சமமாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் இந்த செயல்முறையின் மூலம் நாங்கள் புரிந்துகொண்டோம்.

இந்தப் பயணத்தின் மூலம் சிலாவத்துறை மற்றும் கூலாங்குளம் என்ற எங்கள் இரு கிராமங்களுக்கும் பொதுவான விளையாட்டு மைதானம் வேண்டும் என்ற நீண்ட கால கனவை எங்களால் அடைய முடிந்தது. எமது சமூக செயற்பாட்டுத் திட்டத்தின் (SAP) ஊடாக பிரதேச செயலகம்[1], நீர்ப்பாசன திணைக்களம், விவசாய அமைப்பு மற்றும் உள்ளூர் சமூகங்களின் ஆதரவையும் தலையீட்டையும் திரட்டி, எமது பிள்ளைகள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும் கூடுதல் பாடநெறி செயல்பாடுகளை மேம்படுத்தவும் காணித்துண்டொன்றை தற்காலிகமாக ஒதுக்கி எங்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்த SEDR Active Citizens பயணம் எனது குழுவிற்கும் எனக்கும் மரியாதையையும் மற்றும் எங்கள் சமூகத்திற்கும் பங்குதாரர்களிற்கும் இடையே சிறந்த ஊடாட்டத்தையும் அளித்தது.






[1] பிரதேச செயலகங்கள் இலங்கையில் பெரும்பாலான அரசாங்க சேவைகளை வழங்கும் அடிமட்ட நிர்வாக அலகுகளாகும். பொதுமக்களுக்கு விரிவான சேவைகளை வழங்குவதைத் தவிர, ஒரு குறிப்பிட்ட பிரிவில் நடைபெறும் அனைத்து வளர்ச்சி நடவடிக்கைகளையும் வழிநடத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் பிரதேச செயலகங்கள் பொறுப்பாக உள்ளன.

72 views0 comments
bottom of page