SEDR திட்டத்தின் இந்த ஆண்டின் முதல் நிகழ்வான மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான ஆரம்ப பயிற்சி [Development Officers Induction Training (DOIT)], கடந்த வாரம் தொடங்கப்பட்டது, இது அடுத்த சில வாரங்களில் வழங்கப்படும் ஏழு (7) 3 நாள் பயிலரங்குகளில் முதன்மையானது. இந்த 3 நாள் பயிலரங்குகள், நீதிக்கான அணுகல், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மாற்றுப் பிணக்குத் தீர்வு போன்ற துறைகளில் நாடு முழுவதிலும் உள்ள மத்தியஸ்த சபைகளின் மேம்பாட்டு அதிகாரிகளின் திறனை வளர்ப்பதற்கான அமர்வுகள் நிறைந்த நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளன. இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் ஆசியா நிலையம் ஆகிய இரண்டின் SEDR குழுக்கள் மமத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு மற்றும் நீதி அமைச்சகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றன.
மேல் மற்றும் தென் மாகாணங்களைச் சேர்ந்த மேம்பாட்டு உத்தியோகத்தர்களுடனான எமது முதலாவது அமர்வு எவ்வாறு சென்றது என்பதற்கான ஒரு சிறிய பார்வை இதோ. மேலும் நிழற்படங்களை இங்கே காணலாம்:
Komentarai