top of page
SEDR Team

Fishermen’s journey towards the horizon



நான் இலங்கையின் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ சமூகமான சிலாவத்துறை கிராமத்தில் வசிக்கும் அப்ஷார். நான் இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் (SLIATE) முகாமைத்துவத்தில் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ளேன். பள்ளிப் பருவத்திலிருந்தே சமூகப் பணிகளிலும் சமூக சேவைப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.


SEDR Active Citizens பயணத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததும் நான் மகிழ்ச்சியடைந்தேன். Active Citizens மேடைத்தளம் சமூக ஈடுபாடு மற்றும் நமது சமூகங்களில் உள்ள பிரச்சினைகளை அணுகுவதற்கான புதுமையான உத்திகள் பற்றிய புதிய கண்ணோட்டங்களை எனக்கு அளித்துள்ளது. பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் பற்றிக் கற்றுக்கொள்வது குறிப்பாக என்னைப் போன்ற இளைஞர்களுக்கு கண்களைத் திறக்கும் அமர்வாக இருந்தது. ஏனெனில் மோதல்கள் எழும்போது, நமக்குத் தெரிந்ததெல்லாம் வன்முறை மற்றும் சட்ட அமைப்புகள் மட்டுமே. Active Citizens பயணத்தில் இணைந்த பிறகு, மாற்றுவழி பிணக்குத் தீர்வு முறைகள் மூலம் முரண்பாடுகளை மேலாண்மை செய்வது பற்றி ஒரு தெளிவைப் பெற்றேன்.


சமய நம்பிக்கைகள் மற்றும் சமத்துவமற்ற அதிகாரப் பகிர்வு காரணமாக மீனவர்களை சமத்துவமற்ற முறையில் நடத்தும் நமது சமூகத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு பிரச்சனை நாங்கள் சமூக செயல்திட்டத்தின் (SAP) மூலம் தீர்க்க முனைந்தோம். இப்பிரச்சனையின் ஆணிவேரை கண்டறிந்ததில், மீனவர் சங்கம் தொடர்பான அனைத்து கூட்டங்களும் நடத்தப்படும் மீன்பிடி ஆய்வாளர் அலுவலகம்[1], பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாது காணப்படுவதையூம், அதன்பின்னர் மீனவ பொதுக்குழு கூட்டம் மற்றும் மீனவ மக்கள் தொடர்பான மற்ற கூட்டங்கள் பல்வேறு இடங்களில் நடைபெறுவதும் கண்டறிய முடிந்தது. ஒரு பொது இடத்தில் கூட்டங்களை நடத்துவதன் மூலம் சமூகங்களுக்கிடையேயான பதட்டங்களைக் குறைத்து, நிலைமையை நேர்மறையான வழியில் தணிக்க முடியும் என்பதையும் நாங்கள் உணர்ந்தோம். சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் பல சந்திப்புகளை நாங்கள் ஏற்பாடு செய்து, சமூகங்கள் தங்கள் செயல்களுக்கு தாங்களே பொறுப்பேற்கும் படியும் மேலும் செயல்களை முறைப்படி செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக ஒரு செயல்திறன் அரங்க நிகழ்வை நடத்தினோம். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் எங்கள் SAPஐ செயல்படுத்தும் போதுஇ ஒரு வெளி அமைப்பு மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தைப் புதுப்பிப்பதில் தங்கள் ஆதரவை வழங்கியது. இது எங்கள் SAP திட்டத்தை எழுதும் போது நாங்கள் விரும்பியதை அடைய உதவியது.


எனது முழு SEDR Active Citizens அனுபவம் எனது தன்னம்பிகையை அதிகரித்தது, எனது அறிவையும் மேம்படுத்தியது மற்றும் எனது உள்ளூர் சமூகத்திற்கு ஆதரவு அளிப்பதில் மிகவும் பயனுள்ளவனாகவும் திறமையாகவும் இருக்க தக்க வகையில் எனது திறன்கள் மற்றும் ஆளுமைகளை வளர்க்க எனக்கு உதவியது. மேலும், ஒரு விடயத்தை சாதிப்பதில் பலர் ஒன்று சேர்வதன் மூலம் பலம் பெற முடியும் என்பதை உணர முடிந்தது. Active Citizenனாக இருப்பது நமது குரல்களை வலுப்படுத்துகிறது மற்றும் உலகில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் மற்றும் நமது சமூகங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதற்கான நமது இலக்குகளை வெளிப்படுத்துகிறது.



[1] கரையோர பகுதிகளில் கடற்றொழில் தொடர்பான அனைத்து கேள்விகள், சிக்கல்கள் மற்றும் ஆவணங்களைக் கையாளும் அரச அலுவலகம்.

49 views0 comments

Comments


bottom of page