கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், கௌரவ. நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான (இடைக்கால) தலைவர் பியட்ரிஸ் புஸ்ஸி, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியநாத் பெரேரா, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் தலைவர் கௌரவ. நீதியரசர் யாப்பா, மற்றும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மத்தியஸ்த பயிற்சி மற்றும் மத்தியஸ்தர்களுக்கான திறனை வளர்ப்பதில் முதலீடு செய்வது, மத்தியஸ்தம் மற்றும் ADR பற்றிய பொது விழிப்புணர்வை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையில் மத்தியஸ்தத்திற்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கொள்கை விளக்கம் எடுத்துக்காட்டுகிறது. சில முக்கிய ஆய்வு முடிவுகள் பின்வருமாறு:
சனசமூக மத்தியஸ்த சபைகளை அணுகியவர்களில் 89% பேர், தங்கள் பிணக்குகள் தீர்க்கப்பட்ட விதத்தில் திருப்தி அடைவதாகக் கூறினர்.
சனசமூக மத்தியஸ்த சபைகளைப் பயன்படுத்திய 80% பேர் எதிர்காலத்தில் அவற்றை மீண்டும் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
பெரும்பாலான பதிலளித்தவர்கள், பாரம்பரிய முறையான நீதி முறையைப் பயன்படுத்துவதை விட, தங்கள் பிணக்குகளைத் தீர்க்க சனசமூக மத்தியஸ்த சபைகளை பயன்படுத்துவது அல்லது மதத் தலைவர்களை அணுகுவது மலிவானது மற்றும் விரைவானது என்பதை உறுதிப்படுத்தினர்.
பதிலளித்தவர்களில் 73%, குறிப்பாக இளைய சமுதாயம், சனசமூக மத்தியஸ்த சபை செயல்முறைகள் பற்றி மேலும் அறிய விரும்புவதாகக் குறிப்பிடுகின்றனர்.
பதிலளித்தவர்களில் 67% எந்த ADR மன்றத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வகிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கொள்கைச் விளக்கத்தை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழில் SEDR இன் https://www.sedrsrilanka.org/resources இணையதளத்தில் அணுகலாம்
Comments