மே 31 ஆம் திகதி, நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற உலக நீதி பொது மன்றம் 2022 இல், தேசிய மத்தியஸ்த திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை குழுவினர், "நீதிக்கான பாதைகள்: உள்ளூர்மயமாக்கப்பட்ட சமூக தீர்வுகளுக்கான பயனுள்ள கருவிகள்" என்ற கருப்பொருளிலான பணி அமர்வில் கலந்துகொண்டனர். இந்த அமர்வின் போது மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் இரண்டு மத்தியஸ்த பயிற்சி அதிகாரிகள் மற்றும் இரண்டு தன்னார்வ மத்தியஸ்தர்கள் இலங்கையில் மத்தியஸ்தம் எவ்வாறு செயல்படுகிறது என்பதின் பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர். அது, இந்தத் துறையில் பயிற்சியாளர்களாக இருந்த அவர்களின் அறிவு, விசித்திரமான கதைகள் மற்றும் அனுபவத்தால் பெற்றுக்கொண்ட நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு அற்புதமான அமர்வாக அமைந்தது.
நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற உலக நீதி பொது மன்றம் 2022 நினைவுகூர வேண்டிய நிகழ்வாக அமைந்தது. அங்கு இலங்கை பிரதிநிதிகளுக்கு இலங்கையில் மத்தியஸ்தம் பற்றிய தங்கள் சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது மட்டுமல்லாமல், எண்ணற்ற பணி அமர்வுகளில் ஒரு பகுதியாக அமையும் வாய்ப்பையும் குழு பெற்றுக்கொண்டது. நீதி சீர்திருத்தங்களில் மக்களின் நீதித் தேவைகளை எவ்வாறு மையமாக்கிக்கொள்வது, சமூக நீதி, நீதித்துறை நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நியாயமான கொள்கைகளை வைத்திருப்பது என்பதின் உண்மையான அர்த்தம் என்ன என்ற கருப்பொருற்களில் பல அமர்வுகள் இடம்பெற்றன. இதன்போது இலங்கையின் பிரதிநிதிகள், நீதியை அணுகுவதற்கான ஆர்வத்துடன் செயற்படும் பல உத்வேகமான நீதிப் பயிற்சியாளர்களையும், சீர்திருத்த எண்ணம் கொண்ட நீதி அதிகாரிகளையும் சந்தித்தனர்.
Comentários