top of page
sakshiselvanathan

சமத்துவம்,பன்முகத்தன்மைமற்றும்உள்வாங்கலைவளர்ப்பது


சமீபத்தில், SEDR இனால் எங்கள் பணிகளில் சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் உள்வாங்கல் ஆகியவைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தாக்கமான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நுண்ணறிவுமிக்க வட்ட மேசை கலந்துரையாடலின் சிறப்பம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.


தனிநபர்மற்றும் சமூக அளவிலான குறைகளை தீர்ப்பதற்கு மாற்றுவழி பிணக்குத் தீர்வு சேவைகளை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, LGBTQIA+ சமூகம் எதிர்கொள்ளும் தேவைகள் மற்றும் சவால்கள் மீது நாங்கள் கவனம் செலுத்தினோம். இந்த மூடிய அமர்வு திறந்த உரையாடல் மற்றும் அர்த்தமுள்ள பரிமாற்றங்களுக்கு பாதுகாப்பான இடத்தை வழங்கியது.


வட்ட மேசை கலந்துரையாடலின் நோக்கங்கள்:

  • ·SEDR இன் பணிகள் மற்றும் இலங்கையின் தேசிய மத்தியஸ்த திட்டத்திற்கு நாம் வழங்கும் ஆதரவு பற்றிய தகவல்களைப் பகிர்தல்.

  • ·LGBTQIA+ சமூகம் மத்தியஸ்த சேவைகளை அணுகுவதற்கும் பயனடைவதற்கும் ஏற்கனவே உள்ள அல்லது சாத்தியமான தடைகளைப் புரிந்துகொள்ளல்.

  • ·மாற்றுவழி பிணக்குத் தீர்வு சேவைகளில் உள்ள இடைவெளிகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதைப் பற்றி ஆலோசித்தல்.

  • ·அந்த இடைவெளிகளை நிவர்த்தி செய்வதில் SEDR இன் சாத்தியமான பங்கைக் கருத்தில் கொள்ளுதல் .


சனசமூக உறுப்பினர்கள், நிபுணர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்காக வாதிடுபவர்கள் உட்பட பலதரப்பட்ட குரல்களுடன் ஈடுபடும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. LGBTQIA+ சமூகத்திற்கான உள்வாங்கல் மற்றும் ஆதரவை மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகள் மற்றும் யோசனைகளை உருவாக்கிய கலந்துரையாடல்கள் சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தன.


SEDR எங்கள் நிபுணத்துவம் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி மேலும் உள்வாங்களை கொண்ட சமுதாயத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. ஒன்றாகச் செயல்படுவதன் மூலம், நாம் இடைவெளிகளைக் குறைக்கலாம், தடைகளைத் தீர்க்கலாம் மற்றும் மாற்றுவழி பிணக்குத் தீர்வு சேவைகளுக்கு அனைவருக்கும் சமமான அணுகல் இருப்பதை உறுதிசெய்யலாம்.


உள்வாங்கல் மிகுந்த மற்றும் நியாயமான சமுதாயத்திற்காக நாங்கள் பாடுபடுகையில், ஒதுக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் எங்களின் தொடர்ச்சியான முயற்சிகள் குறித்த சேதிகளுக்காக காத்திருங்கள்.

4 views0 comments

Comentarios


bottom of page